நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவருக்கு தமிழ்வழி கல்வி சான்றிதழ் கிடைத்தது
நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவருக்கு தமிழ்வழி கல்வி சான்றிதழ் கிடைத்துள்ளது.;
நெல்லை மாவட்டம் யாகோபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருமைதாஸ் மகன் ஜெபசாமுவேல். இவர் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'நான் ஒரு பள்ளியில் 10, 12-ம் வகுப்பு படித்து உள்ளேன். தற்போது போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். அதற்கு நான் படித்த பள்ளியில் இருந்து தமிழ்வழி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் எனக்கு அந்த சான்றிதழை தர மறுக்கிறது. இதனை பெற்றுத்தர வேண்டும்' என்று கூறி இருந்தார். இதுகுறித்து நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா பள்ளி தலைமை ஆசிரியருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி தமிழ்வழி சான்றிதழை பெற்று மாணவர் ஜெபசாமுவேலுக்கு வழங்கினார்.