வேலை நிறுத்த போராட்டம் 12-வது நாளாக நீடிப்பு

என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 12-வது நாளாக நீடித்தது. அமைச்சர் வீட்டுக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-06 19:10 GMT

நெய்வேலி, 

வேலை நிறுத்த போராட்டம்

பணிநிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் நெய்வேலி மத்திய பஸ்நிலையம் அருகில் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

11-வது நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் எந்த பதிலும் அளிக்க முன்வராத நிலையில் விருத்தாசலத்தில் வசித்து வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்திப்பதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் அவரது வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் விடுவித்தனர்.

12-வது நாளாக நீடிப்பு

இந்த நிலையில் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 12-வது நாளாக நீடித்தது. மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்