புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-05 20:56 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழாவில் கள்ளிகுளம் பிளாரிட்டி சமூக அலுவலகம் அருட்பணி ஒய்.தேவராஜன், வடக்கன்குளம் ஜெபமாலை தூதுவர் சபை ஜான்போஸ்கோ, ஆனைகுளம் பங்குத்தந்தை லூர்துசாமி, பார்பரம்மாள்புரம் பங்குத்தந்தை அமல்ராஜ், இலங்குளம் பங்குதந்தை பிரான்சிஸ், சேசுசபை குரு வில்பிரட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ம் நாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், அன்னையின் சப்பர பவனி, மாலை ஆராதனை நடைபெறும். 10-ம் நாளான 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியை தொடர்ந்து அன்னையின் கொடியிறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜேசுதுரை, உதவி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்