வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்;

Update: 2022-06-30 15:08 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நாகை சாலையில் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி, தாசில்தார் அலுவலகம், சட்டமன்ற அலுவலகம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சார்நிலை கருவூலம், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் நடைபெற்று வருகின்றன. எனவே விபத்தை தடுக்கும் வகையில் வேதாரண்யம் நாகை சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்