தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!

இருசக்கர வாகனங்கள் நபரை கைதுசெய்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.;

Update: 2023-08-04 17:47 GMT

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்பேரில், தனிப்படை போலீசார், அங்கு தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு திருடர்களை பிடிக்க மும்முரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முருகன் என்ற நபரை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

அவர் இதுவரை 20 வாகனங்களை திருடியுள்ளதும், திருடிய வாகனங்களை 3 மணி நேரத்திற்குள்ளாகவே பிரித்து தனித்தனியாக விற்று வந்ததும் தெரியவந்தது. தற்போது அந்த நபரை கைதுசெய்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்