தேவர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை

தேவர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2022-10-30 21:30 GMT

வள்ளியூரில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

வள்ளியூர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வள்ளியூரில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா, வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன், அலெக்ஸ் அப்பாவு, ஆதி பாண்டி, மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூரில் தி.மு.க. சார்பில் தேவர் சிலைக்கு ஞானதிரவியம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் நம்பி, வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன், நகர செயலாளர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராதாபுரம்

ராதாபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்துக்கு, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி, அமைச்சியார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட பிரதிநிதி வேலப்பன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, பஞ்சாயத்து தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மேலும் தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம். பி., நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஷமீம் இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் மகாராஜன் கலந்து கொண்டார். மலையான் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கடையநல்லூர்

கடையநல்லூர் தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகரச் செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு தென்காசி மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.ஆர்.அய்யாதுரை மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகையா, மாவட்ட செயலாளர் தியாகராஜன், வட்டார தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கார்த்திக் துரை ஆகியோர் கலந்து கொண்டனர். தேவர் நல சங்கம் சார்பில் ரத்த தானம் நடைபெற்றது. த.மா.கா. சார்பில் ஜூஸ் வழங்கப்பட்டது.

தலைவன்கோட்டை

சங்கரன்கோவில் அண்ணா பஸ்நிலையம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட தேவர் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. பிரமுகரும், சங்கரன்கோவில் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன் கோட்டை கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து புளியங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, தலைவன்கோட்டை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயபாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், தலைவன்கோட்டை நாட்டாண்மை சுப்பையா பாண்டியன், புளியங்குடி தேவர் சமுதாய நாட்டாண்மை முத்துப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. பிரமுகரும் ஏ.வி.கே. கல்வி குழும தலைவருமான எஸ்.அய்யாத்துரை பாண்டியன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்