ராணுவ வீரரின் உடல் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டது

ராணுவ வீரரின் உடல் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டது

Update: 2023-05-31 19:15 GMT

வால்பாறை

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(வயது 58). ராணுவ வீரர். இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். அகமதாபாத்தில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 29-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல், அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வாகனம் மூலம் வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தாமசின் மனைவி சாந்தியிடம், அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் வால்பாறை தாசில்தார் அருள்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் தாமசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கத்தோலிக்க திருச்சபையின் கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனைகளுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு இன்னும் 10 மாதங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்