சுசீந்திரம்:
தேரூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி, மீன் வியாபாரி. இவரது வீட்டில் நேற்று ஒரு நல்ல பாம்பு புகுந்து சமையல் அறையில் பதுங்கி இருந்தது. இதைபார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சமையல் அறையில் பதுங்கி இருந்த பாம்பை லாபகமாக பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது. அதை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்றனர்.