வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

கோத்தகிரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.;

Update: 2023-07-10 20:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி காம்பாய்கடை பகுதியில் உள்ள மணிமேகலை என்பவரது வீட்டின் மேற்கூரை வழியாக நேற்று 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. பாம்பு வீட்டிற்குள் புகுந்ததை கண்டு உள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அலறியடித்த படி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கூரையில் இருந்த ஓடுகளை அகற்றி, கூரையில் பதுங்கி இருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டு எடுத்து சென்றனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்