கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடக்கம்

கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடங்குகிறது.;

Update: 2023-02-27 18:45 GMT

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் மீண்டும் நடக்கிறது. அதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆண்களுக்கு நாளை (புதன்கிழமை), பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே இணைய தளத்தில் பதிவு செய்த வீரர்கள், வீராங்கனைகள் மட்டும் உரிய பதிவு விவரம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் விளையாட்டு சீருடையுடன், சரியான நேரத்திற்கு வருகை தந்து, போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்