பழக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பழக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-21 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பழக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பழக்கடை உாிமையாளர்

நாகர்கோவில் கோட்டார் இருளர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 56). இவருடைய மனைவி கவிதா (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியிலும், மகள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். அண்ணாதுரை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கவிதா தனது மகன் மற்றும் மகளை பார்க்க கடந்த 19-ந் தேதி புறப்பட்டு சென்றார். இதனால் வீட்டில் அண்ணாதுரை தனியாக வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல அண்ணாதுரை கடைக்கு சென்று இரவு வீடு திரும்பினார்.

தூக்கில் பிணமாக...

இந்தநிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்காக கடை ஊழியர் ஒருவர் சாவி வாங்க அண்ணாதுரையின் வீட்டுக்கு வந்தார். அங்கு நீண்ட நேரம் அழைத்தும் அண்ணாதுரை கதவை திறக்கவில்லை. பின்னர் அண்ணாதுரையின் சகோதரர் பன்னீர்செல்வத்தை ஊழியர் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.

தொடர்ந்து வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது அண்ணாதுரை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழக்கடை உரிமையாளர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்