ஸ்கூட்டரில் புகுந்த பாம்பால் பரபரப்பு

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-12-11 19:37 GMT

அறந்தாங்கி கட்டுமாவடி முக்கத்தில் உள்ள கடைகளுக்கு முன் மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு ஸ்கூட்டரில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அருகே நின்றவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் அங்கிருந்தவர்கள் ஸ்கூட்டரை கீழே சாய்த்து போட்டு பார்த்தனர். அப்போதும் பாம்பு வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஸ்கூட்டரின் பாகங்களை கழட்டிய போது, அதில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்