தியாகதுருகம் அருகேபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தியாகதுருகம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் வேளாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாரிமுத்து (வயது 66) என்பவர் தனது பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்து ரூ.160 மதிப்பிலான 8 பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.