காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு தகவல்
செப்டம்பர் மாதத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.;

சென்னை,
டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் மாதத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் , ஜனவரி மாதம் 5 மாவட்டங்களில் மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் முதல் மேலும் 5 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திட்டம் அமல்படுத்தப்படுவது தொடா்பான அறிக்கையை ஏப்ரல்.4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு சென்னை ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது .