பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது

பொதுமக்களை மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-05-01 18:45 GMT


விழுப்புரம் ரெயில்வே நிலையம் அருகே நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் வீண் பிரச்சினை செய்து அவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். உடனே அந்த நபரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர், விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த தேவேந்திரன் (வயது 45) என்பதும், ரவுடியான இவர் மீது விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்