மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அதே அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் தங்க மாரிமுத்துவும் பணியில் இருந்தார். அப்போது மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்து தங்கமாரிமுத்து உடனே வெளியேறினர். இதனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் தங்க மாரிமுத்துவின் கணினி சேதமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.