காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2022-07-16 19:25 GMT

காட்டுப்புத்தூர், ஜூலை.17-

காட்டுப்புத்தூர் அருகே உள்ள உடையாகுளம் புதூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மகேந்திரன் (21).இவரும் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சசிகலா (21) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியினர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் இருவீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். பிறகு இரு வீட்டாரையும் சமாதானம் செய்து அவர்களுடன் தம்பதியை அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்