காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2023-07-19 19:24 GMT

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலக்காரைக்காட்டை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சூர்யா(வயது 21). கொத்தனாரான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதா(19) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களின் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்