ரெயில் நிலையத்தில் வழிப்பறி செய்தவர் கைது

ரெயில் நிலையத்தில் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-26 19:30 GMT

தர்மபுரியைச் சேர்ந்தவர் ராம்சங்கர் (வயது 53). இவர் தர்மபுரி ரெயில் நிலையத்தில் டீ விற்பனையில் ஈடுபட்டிருந்தார். ரெயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ராம் சங்கர் தட்டில் வைத்திருந்த ரூ.500- ஐ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து ராம் சங்கர் தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (43) என்பவர் பணத்தைப் பறித்து சென்றது தெரியவந்தது. தர்மபுரி ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்