சேறும், சகதியுமாக மாறிய சாலை
சேறும், சகதியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கலைஞர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தெருக்களில் சாலை மண் சாலைகளாக குண்டும் குழியுமாக, காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். லேசான மழை பெய்தால் கூட சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.இதனால் இந்த சாலைைய பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சகதி நிறைந்த சாலையில் செல்லும் போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை கலைஞர் நகர் பகுதியில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த சாலையை மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும், சகதியுமாக கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்று காணப்படுகிறது.இதனால் இப்பகுதியில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குண்டும் குழியுமான சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.