அரக்கோணத்தில் அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட சாலை - மக்கள் அதிர்ச்சி
அடிபம்புடன் சேர்த்து, சாலை போடப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், அடிபம்புடன் சேர்த்து சாலை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் நகராட்சி 18வது வார்டு தாசில்தார் குறுக்கு தெருவில் நகராட்சி சார்பில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த அடிபம்புடன் சேர்த்து, சாலை போடப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அடிபம்பில் இருந்து தண்ணீர் பிடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள், ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.