பர்கூர் அருகேபாம்பாற்றில் மீனுக்கு விரித்த வலையில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள செக்கில்நத்தம் பகுதியைச் சேர்ந்த சிலர் அருகே உள்ள பாம்பாற்றில் மீன்பிடிக்க நேற்று முன்தினம் இரவு வலை விரித்து வைத்து இருந்தனர். இதனிடையே நேற்று காலையில் வலையை சென்று பார்த்தபோது அதில் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து நேரலக்கோட்டை காப்புக்காட்டில் விட்டனர்.