நத்தம் அருகே சாயஓடை பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிலமணி நேர போராட்டத்துக்கு பின்னர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் புதரில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கரந்த மலை வனப்பகுதியில் கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர்.