மலைப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update: 2023-09-18 18:00 GMT

நாட்டறம்பளியை அடுத்த கொத்தூர் மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்களை விஷ வண்டுகள் அச்சுறுத்தி வந்தன. இதனையடுத்து முருகேசன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ பந்தம் மூலம் அழித்தனர். மேலும் நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்