குடியிருப்பில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

குடியிருப்பில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2023-01-19 10:27 GMT

அவினாசி

அவினாசி அருகே சின்னேரிபாளையம் மற்றும் பழங்கரை ஊராட்சி பகுதிகளில குடியிருப்புகள் அதிகம் உள்ளபகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின்ர் கோபுரம் அமைக்கக்கூடாது என்று முதல்- அமைச்சர், கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவர் ஆகியோருக்கு புகர் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் கூறியதாவது:-

பழங்கரை மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சி குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தினர் கோபுரம் அமைக்கும் பணிக்காக வீடுகளின் மேற்புறமாக கேபிள்களை கொண்டு செல்லும் பணி மேற்கொண்டுள்ளனர். இதனால் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள்நலன்கருதி அந்தப் பகுதியில் கோபுரம் அமைக்க தடைசெய்ய வேண்டும்.

இவ்வாற அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மேற்படி எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்