வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-08 13:32 GMT

ஜீயபுரம், ஜூலை.9-

அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி சுப்பராயன்பட்டி மெயின் ரோட்டில் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் 500 மீட்டர் அளவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நேற்று முன்தினம் வடிகால் வாய்க்காலுக்கு இருபுறமும் தடுப்பு கட்டை கட்டுவதற்காக கான்கிரீட் போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி தரமற்ற முறையில் கான்கிரீட் போடப்பட்டதால் தான் இடிந்து விழுந்தது என்று கூறி தடுப்பு சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். இதை அறிந்த ஒப்பந்ததாரர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்