ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-08 19:10 GMT

அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் சாலையில் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான 2½ ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். அதனை அகற்ற இலுப்பூர் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து வருவாய் துறையினரை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் இன்று (வியாழக்கிழமை) அகற்றப்படும் என வருவாய் துறையினர் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்