கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.;

Update: 2023-06-25 06:53 GMT

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது. தக்காளி, கத்தரிக்காய், முட்டை கோஸ், சுரக்காய், காலி பிளவர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கியது.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.80 முதல் 85 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 850 டன் தக்காளி தினமும் கொண்டு வரப்படும் நிலையில், தற்போது நாளொன்றுக்கு 350 டன் தக்காளி மட்டுமே வருவதால் விலையேற்றம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்