தென்காசி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

தென்காசி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-08-24 14:10 GMT

தென்காசி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அதிக விளைச்சல்

தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். அதாவது வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் விவசாயிகள் சாலையில் தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். இதனை கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ 250 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஓசூரில் இருந்து தக்காளி கன்றுகளை கொண்டு வந்து விவசாயம் செய்கிறோம். இந்த கன்றுகளை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறோம். தக்காளிகளை பறிப்பதற்கு தொழிலாளி ஒருவருக்கு ரூ.500 வரை கூலிகொடுக்கப்படுகிறது. ஆனால் வியாபாரிகள், தக்காளி விலையை மிகவும் குறைந்த விலைக்கே கேட்டுகிறார்கள். இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் காரணமாக சாலைக்கு வந்து விவசாயிகள் நேரடியாக தக்காளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் நாங்கள் வேதனை அடைந்து உள்ளோம். மேலும் சின்ன வெங்காயம், வெண்டைக்காய் போன்றவற்றின் விலையும் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது' என்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்