தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு இன்று ரூ.328 உயர்வு..!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.;

Update: 2023-01-03 05:26 GMT

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால், நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.41,528 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.5,191-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,500 க்கு விற்பனையாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்