பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்தது.

Update: 2023-07-21 19:30 GMT

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் ஓசூரில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு நாள்தோறும் வரத்து, தேவையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால் பூக்களின் தேவை நேற்று அதிகரித்தது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்ற மல்லிகைப்பூ விலை உயர்ந்து மொத்த விலையில் கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையிலும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை ஆனது.

அதேபோல் கிலோ ரூ.150 வரையில் விற்பனை ஆன முல்லை, ஜாதிப்பூ விலை அதிகரித்து தலா கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் பூக்களின் விலை (கிலோவில்) செவ்வந்தி ரூ.250, ரோஜா ரூ.120, அரளி ரூ.100, சம்பங்கி, கனகாம்பரம் தலா ரூ.150, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.50-க்கு நேற்று விற்பனை ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்