நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும், அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி 1 கிேலா ரூ.650-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும், அரளி ரூ.180- க்கும், ரோஜா ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.550- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது.
நேற்று குண்டு மல்லி 1 கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.180- க்கும், முல்லைப்பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் விற்பனையானது. திருமணம் மற்றும் பல்வேறு விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.