விஷம் தின்ற தொழிலாளி சாவு

விஷம் தின்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-10-31 19:13 GMT

கடவூர் தாலுகா தெற்கு மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 24-ந்தேதி மதுவை வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். இதனை அவரது பாட்டி கண்டித்துள்ளார். இதையடுத்து பாட்டியை மிரட்டுவதற்காக விளையாட்டுத்தனமாக மதுவில் விஷம் கலந்து குடித்த ராகுல் மயங்கி விழுந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராகுலின் அக்கா கணவர் தனபால் கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்