மதுரையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு திருச்சியில் தரையிறங்கிய விமானம்
மதுரையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு திருச்சியில் விமானம் தரையிறங்கியது.;
செம்பட்டு:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் நேற்று மாலை 78 பயணிகளுடன் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மதுரையை நெருங்கியபோது மதுரை விமான நிலைய பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு, இரவு 7.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் மதுரை விமான நிலைய பகுதியில் விமானம் தரை இறங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் இரவு 8.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை நோக்கி திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.