சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படம் பதிவேற்றம்

சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணின் புகைப்படம் பதிவேற்றம்

Update: 2023-10-11 19:30 GMT

கரும்புக்கடை

கோவை கரும்புக்கடையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கரும்புக்கடையை சேர்ந்த நூர்புல் தவுசிப் (25) எனது 23 வயதான மகளுடன் பழகி வந்தார். பின்னர் அவர் எனது மகளை வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்து இருக்கிறார். இதற்கடையே நூர்புல் தவுசிப்பின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசுவதை எனது மகள் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் எனது மகளிடம் நீ என்னிடம் பேசவில்லை என்றால், உனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இருந்தபோதிலும் எனது மகள் அவருடன் பேசிவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நண்பர்கள் உதவியுடன் எனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் கரும்புக்கடை போலீசார் நூர்புல் தவ்சிப் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்