தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-12 18:45 GMT

கிணத்துக்கடவு, 

கிணத்துக்கடவு மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன் பாபு (வயது 39). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அவர் கிணத்துக்கடவில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்க சென்றார். பின்னர் அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (25) என்பவர் மோகன் பாபுவிடம், ரூ.500 கொடுத்தால் சினிமா டிக்கெட் தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு மோகன் பாபு தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பணம் இல்லாமல் ஏன் வந்தாய்? என கூறி, செல்போனை கொடு, இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என கார்த்தி மோகன் பாபுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மோகன் பாபு கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்