பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
நெல்லை அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தாழையூத்து ராஜவல்லிபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 26). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ஒரு பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணையும், பெண்ணின் தாயையும் ரஜினி அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து ரஜினியை கைது செய்தனர்.