அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-11 19:09 GMT

சிவகாசி, 

சாத்தூர் அருகே உள்ள வீரபாண்டியபுரத்தை சேர்ந்த கலையரசன் (வயது 47). இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடும் வகையில் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. தொழில்நுட்ப அணியின் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் வீரசுப்பிரமணியன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கலையரசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கலையரசனை கைது செய்தனர். கலையரசன் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில நிர்வாகியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்