ஆசிரியையிடம் நகை பறித்தவர் கைது
நாங்குநேரி அருகே ஆசிரியையிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.;
களக்காடு:
நாங்குநேரி அருகே மேலகாரங்காட்டை சேர்ந்தவர் சகாயலதா (வயது 49). ஆசிரியை. சம்பவத்தன்று பள்ளி முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். மீனவன்குளம்-மருகால்குறிச்சி சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த 2 பேர் வழிமறித்து சகாயலதா அணிந்திருந்த 7 பவுன் தங்கசங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தியதில், நெல்லை மேலப்பாளையம் கணேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ரத்தினகுமார் என்ற கொக்கிகுமார் (30) உள்பட 2 பேர் சங்கிலி பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ரத்தினகுமாரை கைது செய்து, சங்கிலியை மீட்டனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.