அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது
சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராக் மகன் மகாராஜன் (வயது 20). இவர் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் தூண்டும் வகையிலும் அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெங்களூருவில் இருந்த அவரை கைது செய்தார்.