கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை குலவணிகர்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவருக்கு கங்கைகொண்டான் அருகே சொந்தமாக இடம் உள்ளது. அந்த இடத்தில் சில நாட்களாக மர்ம நபர்கள் சரள் மண்ணை திருடுவதாக கேள்விப்பட்டு ராஜேந்திரன் மற்றும் அவரது தம்பி செல்வராஜ் ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது 2 லாரிகள், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (40), துர்க்கைமுத்து உள்பட 3 பேர் சேர்ந்து சரள் மண் திருட்டில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட ராஜேந்திரனையும் அவரது தம்பியையும் அவதூறாக பேசி லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகாராஜனை கைது செய்தார்.