மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-21 18:08 GMT

கரூர் சுங்ககேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு செயற்குழு உறுப்பினர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பாலா, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜனநாயக விரோத போக்குகளை கரூர் மாவட்ட காவல்துறை கைவிட வேண்டும், கைவிடாத பட்சத்தில் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் திரட்டி போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் முருகேசன், முத்துச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்