அமைச்சர் குறித்து அவதூறு பதிவிட்டவர் கைது
சிவகாசியில் அமைச்சர் குறித்து அவதூறு பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முனியசாமி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 68). இவர் அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்திருந்தார். இதுகுறித்து தி.மு.க. விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து நாகராஜன் அவதூறு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.