வாலிபரை தாக்கியவர் கைது

செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-26 18:01 GMT

வெளிப்பாளையம்:

நாகை, வெளிப்பாளையம் நடுக்கண் தீர்த்த விநாயகர் சன்னதி பகுதியை சேர்ந்தவர் பாலா. இவருடைய மகன் விஜய் (வயது 28).இவர் கடந்த 24-ம் தேதி நடுக்கண் தீர்த்த விநாயகர் சன்னதி தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த மருத்துவதெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கோபிநாத் (28) என்பவர் விழிப்புணர்வு ஏற்படுத்த நீ என்ன பெரிய ஆளா ? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் விஜய்யை தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்