மண் கடத்தலில் ஈடுபட்டவரை கைது

மண் கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-06-17 09:28 GMT

கண்ணமங்கலம்

மண் கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட புவியியல் துறை உதவி இயக்குனர் மகபூப்ஜான் படவேடு பகுதியில் அலுவல் பணியாக சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோ கோவில் அருகே சென்றபோது அவ்வழியே வந்த டிப்பர் லாரியில் 6 யூனிட் மண் கடத்தி வந்ததை பறிமுதல் செய்து ரத்தினபுரியை சேர்ந்த டிரைவர் பிரபுவுடன் (வயது 29) சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

டிரைவர் படவேடு ரத்தினபுரி பிரபு (29) என்பவரை கைது செய்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து லாரி உரிமையாளரான வெள்ளூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜம் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்