டீக்கடை உரிமையாளர் கிணற்றில் தவறி விழுந்து பலி
திமிரி அருகே டீக்கடை உரிமையாளர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கெஜராஜ் (வயது 43), அதேப் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று அதிகாலையில் அருகில் இருந்த கிணற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கெஜராஜ் கிணற்றில் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்த கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.