பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் 3-வது மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பத்தூரில் நேற்று நடந்தது. மாநில துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் கந்தசாமி, பொருளாளர் திருஞானமுருகன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கேசவன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரமோகன் வரவேற்றார்.
கூட்டத்தில், மருத்துவ மற்றும் தொழிற் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்து, குறைகளை களைந்து, மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், மாற்ற வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.