காரில் ரேஷன் அரிசி கடத்திய முதியவர் சிக்கினார்

கயத்தாறு அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-21 15:17 GMT

கயத்தாறு:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பழனி(வயது60). இவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளில் வாங்கி காரில் கடத்தி சென்று, கோழிப்பண்ணை மற்றும் ரைஸ்மில் போன்றவற்றில் சட்டவிரோதமாக விற்று வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் நேற்று காலையில் சிவஞானபுரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மினி காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்து கொண்டிருந்த பழனிைய தடுத்து நிறுத்தினர். அவர் காரில் கடத்தி வந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரையும், ரேஷன் அரிசியுடன் கரையும் தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்