செவிலியருக்கு டெங்கு காய்ச்சல்
வேலூர் ஓல்டுடவுனில் செவிலியர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் செவிலியருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். ஆனாலும் உடல்நலம் குணமடையவில்லை. இதையடுத்து செவிலியருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது.
இதற்கிடையே அவர் ஓய்வு எடுப்பதற்காக வேலூருக்கு வந்தார். இந்த நிலையில் பரிசோதனையின் முடிவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் செவிலியரின் வீடு மற்றும் அந்த பகுதியில் சிறப்பு சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.