புதிய ரெயில்பாதை திட்டம் ரூ.1,483 கோடியில் நிறைவேற்றப்படும்

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக புதிய ரெயில்பாதை திட்டம் ரூ.1,483 கோடியில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று டாக்டர் செல்லகுமார் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-02-13 17:56 GMT

ரெயில் இயக்க கோரிக்கை

ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வரை 1942-ம் ஆண்டு முதல் ெரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த ரெயில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த மார்க்கத்தில் மீண்டும் ெரயில்களை இயக்க வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துவந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் முயற்சி காரணமாக மீண்டும் அந்த பாதையில் ஆய்வு செய்து ெரயில்களை இயக்க ெரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டாக்டர் செல்லகுமார் எம்.பி.க்கு திருப்பத்தூரில் அனைத்துக் கட்சி மற்றும் வியாபார நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாராட்டு விழா திருப்பத்தூர் அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கர் முன்னாள் ஆளுநர் ரத்தின நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் இ.பாரத் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, கம்பன் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியன,் போர்டு அரிமா சங்கத் தலைவர் சாந்தி பூஷன், ெரயில் பயணிகள் சங்க தலைவர் ஜி.கமால்கான், உதவும் உள்ளங்கள் ரமேஷ், என்.வி.எஸ். சங்கத் தலைவர் எஸ்.ராஜா, செயலாளர் டி.கே.ஐயப்பன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் டாக்டர் செல்லகுமார் எம்.பி. பேசியதாவது:-

தள்ளிப்போனது

தேர்தல் வாக்குறுதியாக ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ெரயில் பாதையை மீண்டும் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்து இருந்தேன். ராகுல் காந்தி பிரசார கூட்டத்திலும் இதை கூறியிருந்தேன். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைய வில்லை. ஆகையால் இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று நினைத்து கொண்டிருந்தேன். 1997-ம் ஆண்டு இந்த திட்டத்திற்காக திருப்பத்தூரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நான் பதவி ஏற்றதும் முதல் முறையாக ெரயில்வேத் துறை அதிகாரிகளை சந்தித்து இத்திட்டம் குறித்து கேட்டு அறிந்தேன். அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக கூறினார்கள். ெரயில்வே துறையில் எந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் அந்த திட்டம் மூலம் வரவு கிடைத்தால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த கிருஷ்ணகிரி

Heading

Content Area

மற்றும் ஓசூர் பகுதிகளில் உள்ள 150 தொழிற்சாலைகள், 3,000 சிறு, குறு தொழில்கள் நடைபெறுவதாகவும், 20 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாவதாகவும் கூறி மீண்டும் இந்த பகுதியில் ஆய்வு செய்த போது, நிலக்கரி கொண்டு செல்லும் திறந்தவெளி ெரயில் பெட்டிக்கு ரூ.9,000 செலவாகும், மூடிய நிலையில் உள்ள பெட்டிக்கு ரூ.45 ஆயிரம் செலவாகிறது என்றும், ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய அந்த வண்டியில் கொண்டு சென்றால் ஏர்கண்டிஷனர் தேவை என்றும், அதற்கு கூடுதல் செலவாகும் என்றும் அந்த அளவுக்கு ெரயில்வேக்கு வருமானம் கிடைக்காது என்று மீண்டும் திட்டம் தள்ளிப் போனது.

நிறைவேற்றப்படும்

இந்த திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ெரயில்வே மந்திரியிடம் சென்ற போது இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.2,020 கோடி தேவை என்றும், அதற்கான பட்ஜெட் கிடையாது என்றும் தெரியப்படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் முனிசாமி வீட்டிற்கு நேரில் சென்று இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும், இதில் அரசியல் வேண்டாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறினேன். அவர் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறி அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தார்.

இந்த திட்டத்திற்கு ரூ.1,483 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு மந்திரி ஒப்புதலுக்கு சென்று மீண்டும் ெரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு சென்று, வழித்தடங்களை ஆய்வு செய்ய ரூ.2.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட்டுக்கு முன்னதாகவே நிதி ஒதுக்கப்படுவதாக ெரயில்வே மந்திரி உறுதி அளித்துள்ளார். எனவே கண்டிப்பாக ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக புதிய ெரயில் பாதை அமைக்கப்படும். இந்த திட்ட மூலம் பொதுமக்கள் எளிதில் ஓசூர் வரை செல்லலாம். நேரம் பணம் மிச்சமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் நகர மன்ற உறுப்பினர் கோபிநாத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்